நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நாடோடி மன்னன் பாடல் லிரிக் வீடியோ நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வாத்தி. இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் AK 62, சந்திரமுகி, மாமன்னன் உட்பட 18 தமிழ்ப் படங்களின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது!

இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய்குமார், தோட்டாபல்லி மது, ஹைபர் ஆதி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, ப்ரவீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இதற்கு முன்னதாக தனுஷின் அசுரன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முதலில் டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கலான் படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: இனிமே தான் சிறப்பான சம்பவம் இருக்கு!

வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 2ஆவது சிங்கிள் டிராக் நாடோடி மன்னன் லிரிக் வீடியோ நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஸ்வேதா மேனன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடி மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடோடி மன்னன் லிரிக் வீடியோ எத்தனை மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கவில்லை. இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது. தமிழில் நாடோடி மன்னன் என்ற பாடலுக்கு தெலுங்கில் பஞ்சாரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

AK62: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்?

தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி, அஜித் நடிக்கும் AK62, ஆர்யன், சந்திரமுகி 2, இறைவன், இருகப்பற்று, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 18, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 20, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 24, ரிவால்வர் ரீட்டா, தலைக்கூதல் என்று ஏராளமான படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

Scroll to load tweet…