விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான வரலாற்று சிறப்புமிக்க படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இந்தப் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் - 2 படமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Iraivan: ஜெயம் ரவி ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இந்தப் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை பற்றி பலரும் அறிந்திடாத பக்கங்களை முன்னுதாரணமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல்... மிக நீண்ட தாடி, நீளமான முடி என இதுவரை எந்த படத்திலும் நடித்திராத தோற்றத்திற்கு விக்ரம் மாறி நடித்துள்ளார்.

AK62: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்?

ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் பசுபதி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்து விக்கிப்பீடியா பக்கத்தில் இதுவரை தங்க தகவலும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்தப் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகியுள்ளது. அதன்படி, தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து..! விஜய் ஆன்டனி படுகாயம் அடைந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!

தங்கலான் படம் திரைக்கு வந்த பிறகு தான் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மட்டுமின்றி அஜித் நடிக்கும் AK62, ஆர்யன், சந்திரமுகி 2, இறைவன், இருகப்பற்று, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 18, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 20, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 24, ரிவால்வர் ரீட்டா, வாத்தி, வரலாறு முக்கியம், தலைக்கூதல் என்று ஏராளமான படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

Scroll to load tweet…

Scroll to load tweet…