முதல் சிங்கிள் போஸ்டருடன் ட்விஸ்ட் வைத்த தனுஷ்...இரண்டாவது ராஜாவை தேடும் ரசிகர்கள்

செல்வராகவன் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிப்பார் எனவும் ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவதால் இதில் இரண்டாவது ராஜா யார் என ரசிகர்கள் சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்

Dhanush tweet naane varuven first single poster with twist

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வசூலையும் குவித்திருந்தது. இந்த படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என மூன்று நாயகிகளும், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என இரண்டு மூத்த நடிகர்களும் களம் இறங்கி இருந்தனர். மித்ரன் ஜஹகர் இயக்கியிருந்த இந்தப் படம் தனுஷின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கு காணும் படமாக அமைந்து ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்துகிறது.

முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் முதல் தி கிரே மேன் வரை வெளியான அனைத்து படங்களும் ஓடிடி வெளியீடாக இருந்தது. இதனால் திரையரங்கு கொண்டாட்டத்திற்காக இரண்டு வருட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு திருச்சிற்றம்பலம் நல்ல விருந்து கொடுத்திருந்தது.

Dhanush tweet naane varuven first single poster with twist

மேலும் செய்திகளுக்கு...சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

இதை அடுத்து தனுஷ் தற்போது டோலிவுட்டில் வாத்தி, தமிழில் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் நானே வருவேன் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கி வருகிறார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் , யுவன் சங்கர் ராஜா, செல்வ ராகவன் கூட்டணி இந்த படம் மூலம் அமைந்துள்ளது. முன்னதாக தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்புகளை பெற்று வெற்றி படங்களாக அமைந்திருந்தன.

தற்போது உருவாகி வரும் நானே வருவேன் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. இந்த படம் வரும் 30ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நாளில் தான் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படமும் வெளியாவதால் பெரும் போட்டி நிலவும் என தெரிகிறது.

Dhanush tweet naane varuven first single poster with twist

மேலும் செய்திகளுக்கு...ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

திரைக்கு வர இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் நானே வருவேன் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ஏற்கனவே தகவல் பரவி வந்த நிலைகள், இந்த படத்தின் முதல் சிங்கிள் குறித்தான செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வரும் 7-ம் தேதி மாலை 4:40 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை சைமா விருது வழங்கும் விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு உண்டு.

மேலும் செய்திகளுக்கு... அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

இந்நிலையில் முதல் சிங்கள் வெளியாகும் போஸ்டருடன் "ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம் ஒரு ராஜா நல்லவராம் இன்னொரு ராஜா கெட்டவராம்"  என பதிவிட்டுள்ளார் தனுஷ். ஏற்கனவே இந்த படத்தில் நாயகன் இருவேறு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு சனிக்காகிதம், பீஸ்ட் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள செல்வராகவன் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிப்பார் எனவும் ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவதால் இதில் இரண்டாவது ராஜா யார் என ரசிகர்கள் சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios