“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: அட அமலா பாலா இது?... நடுக்காட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!

சமீபத்தில் சென்னையில் வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் வில்லன் நடிகர் கார்த்திகேயா பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. தற்போது அஜித் பங்கேற்காத நிலையில், அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வலிமை படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ரேஸ் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருந்தார் வினோத். ஆனால் கொரோனா வைரஸ் அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. 

 

இதையும் படிங்க: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

இதனால் வெளிநாட்டில் எடுக்க வேண்டிய காட்சிகளை படக்குழு டெல்லியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பாளர் போனிகபூரும் நேரிடையாக பேசி அனுமதி பெற்றுவிட முயன்றுள்ளார். ஆனால் அங்கு ரேஸ் காட்சிகளை படமாக்க அம்மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து படக்குழு மீண்டும் வேறொரு நல்ல லொக்கேஷனை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.