Asianet News TamilAsianet News Tamil

முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்கான விருதை வென்ற நயன்தாரா.. தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்கள் யார் யார்?

ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

Dadasaheb Phalke awards 2024 full list of winners: Nayanthara wins Best Actress Rya
Author
First Published Feb 21, 2024, 11:01 AM IST

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த் மாஸ்ஸி, நயன்தாரா, ஷாஹித் கபூர், ஆதித்யா ராய் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

மேலும் ஷாருக்கான், ராணி முகர்ஜி, சந்தீப் ரெட்டி வங்கா, நயன்தாரா ஆகியோர் முக்கிய விருதுகளை பெற்றுள்ளனர். ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை முறையே திருமதி சாட்டர்ஜி Vs நார்வே மற்றும் ஜவான் படத்திற்காக ராணி முகர்ஜியும், நயன்தாராவும் பகிர்ந்து கொண்டனர். அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024 : வெற்றியாளர்களின் முழு பட்டியல் :

சிறந்த நடிகர்: ஷாருக்கான் (ஜவான்)
சிறந்த நடிகை: நயன்தாரா (ஜவான்)
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி vs நார்வே)
சிறந்த இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): வருண் ஜெயின், (ஜரா ஹட்கே ஜரா பச்கேவின் தேரே வஸ்தே)
சிறந்த வில்லன் நடிகர்: பாபி தியோல் (அனிமல்)
சிறந்த தொலைக்காட்சி நடிகை: ரூபாலி கங்குலி (அனுபமா)
சிறந்த தொலைக்காட்சி நடிகர்: நீல் பட் (கும் ஹை கிசிகே பியார் மெய்ன்)
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர்: கும் ஹை கிசிகே பியார் மேயின்
வெப் சீரிஸில் சிறந்த நடிகை: கரிஷ்மா தன்னா (ஸ்கூப்)
திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: மௌசுமி சாட்டர்ஜி
இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு: கே.ஜே.யேசுதாஸ்

 

ஜவான் : 

கடந்த ஆண்டு செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவந்த ஜவான், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக், நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்தனர். நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் இதுதான்.

“த்ரிஷா பத்தி மோசமா பேசுனது என் மனசை காயப்படுத்திருச்சு..” மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு..

அனிமல் : 

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படம்  2023 இன் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும். இருப்பினும், ஆணாதிக்க சிந்தனை, பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துவதாக கடும் விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios