“என் மனசை காயப்படுத்திருச்சு..” மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு..

சக நடிகையை மோசமாக பேசியிருப்பது தன்னை காயப்படுத்தி உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Actor Mansson alikhan condemns for defamatory comments about trisha Rya

ஜெயலலிதா மறைவுக்கு ஆட்சியை காப்பாற்ற தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா 10 நாட்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து சேலம் அதிமுக நிர்வாக ஏவி ராஜு எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். மேலும் கூவத்தூர் சம்பவம் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அந்த பேட்டியில் பேசிய அவர் “ கூவத்தூரில் எத்தனைஅ நடிகைகளை கூட்ட வந்தார்கள் தெரியுமா? அதில் எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் பிரபல நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அதனால் நடிகர் ரூ.25 லட்சம் கொடுத்து அந்த நடிகையை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தனர்” என்று கூறினார். 

த்ரிஷா விஷயத்தில் அந்தர் பல்டி அடித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஏ.வி. ராஜு!!

இந்த பேட்டி வைரலான நிலையில் அந்த பிரபல நடிகைக்கு ஆதரவாக இயக்குனர்கள் சேரன், ஆர்.கே செல்வமணி ஆகியோர் கருத்து தெரிவித்தார். அந்த நடிகையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ கவனம் பெற எந்த நிலைக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செல்லும் கீழ்த்தரமான மனிதர்களை திரும்ப திரும்ப பார்க்கும் அருவருப்பாக உள்ளது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டரீதியாக அனைத்தையும் சொல்லப்போகிறேன்” என்று குறிப்பிட்டார். 

இந்த நிலையில் சக நடிகையை மோசமாக பேசியிருப்பது தன்னை காயப்படுத்தி உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஆடியோ பதில் “ அரசியல்வாதி ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் என் துறையில் உள்ள சக நடிகையை பேசி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள். சம்மந்தப்பட்ட நபர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

சமத்துவம் படைத்த தமிழகத்தில் இப்படியான கீழ்த்தரமான பேச்சு கண்டிக்கத்தக்கது. சக திரைத்துறை நடிகை குறித்து மோசமான முறையில் பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தி உள்ளது. இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானவை. அருவருக்கத்தக்கவை. உரியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

கீழ்த்தனமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள்! FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை!

இதனிடையே அதிமுக நிர்வாகி ஏ.வி ராஜு அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நடிகையின் மனம் புண்படும் படி பேசியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்: என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios