பாலிவுட்டின் "Big B" என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருக்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. 

 

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியான செய்தி.... கொரோனாவால் சன் டி.வி. எடுத்த அதிரடி முடிவு...!.

ஆனால் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

 

பாலிவுட்டின் பிதா மகனான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில் “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

அப்போதிலிருந்தே அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அவர் நல்ல படியாக மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்து ட்வீட் செய்தனர். அமிதாப்பின் ஒட்டுமொத்த குடும்பமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இதனிடயே நடிகர் மாதவன் அமிதாப் பச்சன் நலம் பெற வேண்டி பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அஜித்துக்கு வந்த நெருக்கடி...“வலிமை” பட தயாரிப்பாளருக்கு தலயிடம் இருந்து பறந்த இ-மெயில்....!

அதில்,“கொரோனா மோதக்கூடாத இடத்தில் மோதிவிட்டது. அதற்கு யார் பாஸ் என காட்டுங்கள். இனி அதற்கு ஆயுட் காலம் கொஞ்ச காலம் தான்” என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.