இன்று பல சேனல்களில் விதவிதமான சீரியல்கள் வரிசைக்கட்டி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த பல சீரியல்களை ஒளிபரப்பிய பெருமை சன் டி.வி.யையே சேரும். அப்படிப்பட்ட சன் டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் 6 ஆண்டுகளை கடந்தும் ஓடியிருக்கிறது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக சின்னத்திரை மிகவும் ஆபத்தான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

 

இதையும் படிங்க: அய்யோ ஆண்டவா!!... ஒரே நாளில் இத்தனை துக்கமான செய்திகளா?... அதிரும் பாலிவுட்...!

அதிலிருந்து சன் டி.வி. சீரியல்களும் தப்பவில்லை. பல்வேறு நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்திருந்தாலும், குறைவான வேலையாட்களை கொண்டு, பல அனுமதிகளை பெற்ற பிறகு ஷூட்டிங்கை நடத்துவது பெரும் பாடாக உள்ளதாம். இதனால் பொருட்செலவும் கூடுதலாக ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதனால் இனி தொடர முடியாத நிலையில் உள்ள அழகு, கல்யாண பரிசு, சாக்லேட் ஆகிய சீரியல்களை சன் டி.வி. ஏற்கனவே ட்ராப் செய்துவிட்டது. இது தவிர மற்றொரு சீரியலையும் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏராளமான இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த அழகு சீரியல் நிறுத்தப்பட்டது அவர்களை வேதனையில் ஆழ்த்தியிருந்தது. இப்போது இந்த செய்தி இல்லத்தரசிகளுக்கு மேலும் சோகமானதாக மாறிவிட்டது. இருப்பினும் இதே குழுவுடன் புதிய சீரியலை தொடரவும் சன் டி.வி. திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.