“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


கொரோனா பிரச்சனையால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ள சூழ்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை 2021ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த பிரச்சனை ஒருபக்கம் என்றால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் டாப் நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.


லாக்டவுனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு, சினிமா படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால்  தயாரிப்பாளர்கள் பலரும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால் சரிவில் இருக்கும் தமிழ் சினிமாவையும் தயாரிப்பாளர்களையும் மீட்கும் விதமாக கோலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா... ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ்...!

இதுகுறித்து அதிரடி முடிவெடுத்த தல அஜித், அவரே வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூருக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தனது சம்பள விவகாரம் குறித்து அஜித் குறிப்பிட்டுள்ளாராம். படம் எப்போது ரிலீஸ் செய்யப்படுகிறது அப்போதைய சூழல் என்ன என்பதை பொறுத்து சம்பளம் குறித்து முடிவு செய்யலாம் என அஜித் குறிப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.