வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுறேன்..! விமர்சனங்களால் கதறி அழுத கூல் சுரேஷ்... வைரல் வீடியோ!

பிரபல நடிகர், கூல் சுரேஷ் அவரை பற்றி சமூக வலைத்தளத்தில் வெளியான விமர்சனங்களால் மனம் நொந்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு கதறிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
 

cool suresh emotional crying speech video goes viral in internet

தமிழில் பல படங்களில், குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளவர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் தீவிர ரசிகரும் கூட. குறிப்பாக சிம்புவின் படங்கள் வெளியானால் அன்றைய தினம், இவருக்கு தீபாவளி தான். ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து விட்டு, விமர்சனமும் செய்வார். மற்ற சில நடிகர்களின் படங்களையும் ப்ரோமோட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

கூல் சுரேஷ், சில படங்களில் நடித்துள்ளதாலும், எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருப்பவர் என்பதாலும், இவர் திரையரங்கிற்கு வரும் போதெல்லாம் இவருடைய ரசிகர்கள் இவருக்கு அதிக வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதே போல் இவருடன் புகைப்படம் எடுத்து கொள்ளவும் விரும்புவார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தை, கூல் சுரேஷ், தியேட்டருக்கு வந்து பார்த்து விட்டு காரில் செல்ல முற்பட்டபோது, ரசிகர்கள் சிலர் அவரை பார்க்க முண்டியடித்ததால், கூல் சுரேஷின் கார் கண்ணாடி உடைந்தது.

மேலும் செய்திகள்: சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் வீட்டில் களைகட்டிய விசேஷம்! விஜய் டிவி பிரபலங்கள் நேரில் வாழ்த்து!
 

cool suresh emotional crying speech video goes viral in internet

இதுகுறித்த செய்திகள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக, ஒரு சிலர் கூல் சுரேஷுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வந்த நிலையில், இன்னும் சிலர் கூல் சுரேஷை தாக்கி கமெண்ட் செய்து வந்தனர். இதுபோன்ற எதிர்மறையான பதிவுகளை பார்த்து மனம் நொந்த கூல் சுரேஷ் மிகவும் ஆதங்கத்தோடு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்.... உங்களை சிரிக்க வைக்க தானே முயற்சி செய்கிறேன் என கண் கலங்கி அழுதுள்ளார். ஒருவர் வளர்வது உங்களுக்கு பிடிக்காதா...?  என கூறிய அவர் தான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: 45 வருடத்தில் எந்த படத்திற்கும் செய்திடாதை 'சாமான்யன்' படத்திற்காக செய்த ராமராஜன்..!
 

வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும், வண்டிக்கு டியூ கூட கட்டமுடியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல்  'சிம்பு ரசிகர்கள் கூல் சுரேஷ் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டார்கள்' என செய்தி பரவியது. சிம்பு ரசிகர்கள் காரை அடித்து நொறுக்கவில்லை, அவர்கள் எனக்கு கை கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் கார் மீது ஏறிவிட்டார்கள். அதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள், ஆனால் அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதற்காக நான் வருத்தப்படவே இல்லை. 

cool suresh emotional crying speech video goes viral in internet

நான் கஷ்டப்பட்டாலும், என்ன பார்த்து கொள்ள என் நண்பன் சந்தானம் இருக்கிறான். எனக்கு தெரிந்த 10 இயக்குனர்கள் இருக்கிறார்கள். அதே போல், சிம்பு தன்னை சந்தித்து பேசியபோது... நான் திரையரங்கிற்கு வந்தால் கூட இவ்வளவு பேர் என்னை பார்க்க வருவார்களா? என தெரியாது உனக்கு நிறைய பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள் அதை தக்க வைத்து கொள் என கூறினார். இது போன்று பேச எந்த நடிகருக்கும் மனம் வராது, ஆனால் சிம்பு அப்படி கூறினார்.

மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: இவங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரு நம்புவாங்க? ரசிகர்களை மெஸ்மரெயிஸ் செய்யும் த்ரிஷா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

சிம்புவிற்காக தான் படத்தை விமர்சனம் செய்வதாகவும், இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் இனி எந்த படத்திற்கும் விமர்சனமும் செய்ய மாட்டேன் என இவர் அழுதுகொண்டே வீடியோவில் பேசியுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது சிம்பு கூல் சுரேஷுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios