சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் வீட்டில் களைகட்டிய விசேஷம்! விஜய் டிவி பிரபலங்கள் நேரில் வாழ்த்து!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான, செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி வீட்டில் நடந்த விசேஷத்தில், விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
எத்தனையோ இசைகள் இருந்தாலும், தமிழ் நாட்டில் எப்போதுமே நாட்டுப்புற இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. காரணம், குழந்தை பிறப்பில் துவங்கி, காதுகுத்து, மஞ்சள் நீர், கல்யாணம்... போன பல்வேறு சுப நிகழ்ச்சிகளிலும் கிராமங்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி தான் நடத்தப்பட்டு வருகிறது. இது நம் தமிழர்களில் ரத்தத்தில் ஊறிய ஒரு இசை என கூறலாம்.
இந்த கிராமத்து மண் மனம் கமழும், நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் இவரது கணவர் செந்தில் கணேஷ். இருவருமே நாட்டுப்புற கலைஞர்கள் என்பதால் ஒரே சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்: இவங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரு நம்புவாங்க? ரசிகர்களை மெஸ்மரெயிஸ் செய்யும் த்ரிஷா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
இதில் ராஜலட்சுமி இறுதிப்போட்டி வரை செல்லாவிட்டாலும், செந்தில் பைனல் வரை சென்று டைட்டிலையும் தட்டி தூக்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம், இவர்கள் இருவரின் வாழ்க்கையையே திருப்பி போட்டது. பல படங்களுக்கு பின்னணி பாடி வருவது மட்டும் இன்று, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தங்களை போல் நாட்டுப்புற கலையில் முன்னேற துடிப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள். எப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இருவருமே தற்போது தங்களுடைய வீட்டில் நடந்த, விசேஷம் குறித்த புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: அவளே என் கடவுள்... இறந்த மகள் தூரிகை பற்றி கவிதையில் உருகிய கபிலன்... கண் கலங்க வைத்த வரிகள்..!
அதாவது ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் தம்பதியின் குழந்தைகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், விஜய் டிவி தொகுப்பாளர் மகேஷ், விஜய் டிவி பிக்பாஸ் பிரபலன்களான சின்ன பொண்ணு, வேல் முருகன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்காக பாடிய, சாமி பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரம் விருமன் படத்தில் இவர் பாடிய பாடலை நீக்கி விட்டு, படத்தின் நாயகியான அதிதியை யுவன் ஷங்கர் ராஜா பாட வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.