‘லியோ’ சிறப்பு காட்சி; கைவிரித்த தமிழ்நாடு... அனுமதி கொடுத்த புதுச்சேரி - படையெடுக்கும் தளபதி ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி உள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போதே கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததை அடுத்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கோர்ட்டும் அனுமதி தர மறுத்துவிட்டது.
ஆனால் 9 மணிக்கு பதில் 7 மணிக்கு முதல் காட்சியை திரையிடலாம என்பதை அரசு பரிசீலனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் லியோ பட சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறி உள்ளதால், சென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் FDFS பார்க்க புதுச்சேரிக்கு செல்லும் ஐடியாவில் உள்ளனர். லியோ படத்திற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!