Asianet News TamilAsianet News Tamil

இந்த 'பிச்சைக்காரன்' படம் வரும்போதெல்லாம் டீமான்டேசேஷனும் வருதே? அப்போ ரூ.500, 1000... இப்போ ரூ.2000!

2000 ரூபாய் நோட்டு, திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து, 'பிச்சைக்காரன் 2 ' படத்துடன், இந்த சம்பவத்தை கோர்த்துவிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
 

coincidence 2000 rupees banned in pichaikran 2 release date
Author
First Published May 20, 2023, 12:13 AM IST

பூ, சொல்லாமலே, போன்ற தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. இந்த படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார். நாயகியாக சட்னா டைட்டஸ் நடித்திருந்தார். அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக, பல கோடி சொத்துக்கு அதிபதியான விஜய் ஆண்டனி பிச்சைக்காரராக மாறி தன்னுடைய தாயின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா என்பதும் தான் இப்படத்தின் கதை.

இந்த படத்தில் பிச்சைக்காரர் ஒருவர், எஃப் எம் க்கு போன் செய்து பேசுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால், கள்ள நோட்டுகள் அழிக்கப்பட வேண்டும் என்றால் ரூ.500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும். என்பது போன்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.

அமெரிக்க தீவிரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த ரசிகை..! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா!

coincidence 2000 rupees banned in pichaikran 2 release date

இப்படம் வெளியான சில மாதங்கள் கழித்து, 2016 நவம்பர் மாதம்... பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக அறிவித்தார். திடீரென ஆயிரம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்ததால், சில இடங்களில் இந்த நோட்டுகளை வாங்க கடைகளில் மறுத்தனர்.பணப்புழக்கம் குறைந்ததால், பலர் அவதிக்குள்ளாகினர். வங்கி வாசல்களில் பணம் எடுப்பதற்காக பலர் கால் கடுக்க நின்ற சம்பவங்களும் அரங்கேறியது.

மகனுக்காக சமீர் வான்கடேவிடம் கெஞ்சிய ஷாருக்கான்! வாட்ஸ் ஆப் சேட்டிங் லீக்..

coincidence 2000 rupees banned in pichaikran 2 release date

10 நாட்களுக்கு பின்னர் தான் பல்வேறு இடங்களில் சகஜ நிலைமை ஏற்பட்டது.  இந்த டிமாண்டேசேஷன் காலகட்டத்தின் போது, பிச்சைக்காரன் படத்தில் வந்த காட்சி அதிக அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரூ. 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே நெட்டிசன்கள் பலர், இந்த பிச்சைக்காரன் படம் வரும்போதெல்லாம் டிமாண்டேசேஷன் வருகிறது என, மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.அதே போல் 2000 ரூபாய் நோட்டு திரும்பபெறப்படுவதாக அறிவித்திருந்தாலும், அந்த நோட்டுகள் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios