அமெரிக்க தீவிரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த ரசிகை..! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா!
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த தன்னுடைய ரசிகை ஐஸ்வர்யா மறைவுக்கு கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா, நடிகர் என்பதைத் தாண்டி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். தான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்பிற்கு உதவி வருகிறார். அதேபோல், இவருடைய தம்பி கார்த்தியும், விவசாயிகளுக்காக அறக்கட்டளை ஒன்றை துவங்கி, அதன் மூலம் பல்வேறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் அந்த அறக்கட்டளையை நடத்தி வருவதோடு, வருடம் தோறும் விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவித்து வருகிறார்.
இதை தாண்டி அண்ணன் - தம்பி இருவருமே தங்களின் ரசிகர்கள் மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர்கள் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா, தன்னுடைய தீவிர ரசிகையான ஐஸ்வர்யா அமெரிக்காவில் நடந்த தீவிர தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த நிலையில், உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
மகனுக்காக சமீர் வான்கடேவிடம் கெஞ்சிய ஷாருக்கான்! வாட்ஸ் ஆப் சேட்டிங் லீக்..
இது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும், எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன், இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த சம்பவம் உண்மையில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் உங்களின் மகளான ஐஸ்வர்யாவை இழந்தது துரதஷ்டவசமானது. ஒரு சக மனிதராக மட்டுமின்றி, ஒரு தந்தையாகவும் உங்கள் துயரத்தில் நான் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
உங்களின் மகளை, நினைவு கூறும் போதெல்லாம்... என்னுடைய கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருந்து நம் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா குறித்து சூர்யா கூறியுள்ளதாவது, "நீங்கள் என் மீது வைத்திருந்த நேசம் என்றென்றும் நினைவில் இருக்கும். என்னை உங்களின் ஒரு பகுதியாக ஆக்கிய நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்கக் கூடாது. உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இதயபூர்வமான இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். என கூறியுளளார். அதே போல் சூர்யா ஐஸ்வர்யாவின் புகைப்படத்திற்கு பக்கத்தில் பூங்கொத்து வைத்து, கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்திய புகைப்படமும் வெளியாகி உள்ளது.