மகனுக்காக சமீர் வான்கடேவிடம் கெஞ்சிய ஷாருக்கான்! வாட்ஸ் ஆப் சேட்டிங் லீக்..
நடிகர் ஷாருக்கான் தன்னுடைய மகனுக்காக, சமீர் வான்கடேவிடம் கெஞ்சியபடி வாட்ஸ் ஆப்பில் சாட்டிங்கி பாதிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டியில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த தகவல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த போதை மருந்து வழக்கத்தில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான், சுமார் 20 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தன்னுடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டபோது, ஷாருக்கான் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், இந்த விவரம் அறிந்து தன்னுடைய படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பூனேவில் இருந்து மும்பைக்கு திரும்பினார்.
ஆர்யன் கைது தொடர்பாக, மிகவும் மனம் உடைந்து போன ஷாருக்கான், தன்னுடைய மகனுக்காக என்சிபி அதிகாரி சமீர் வாகேடேவிடம் வாட்ஸ் அப்பில் கெஞ்சியது குறித்த ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த whatsapp சேட்டில் ஷாருக்கான், தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய மகனுக்காக மனம் உடைந்து மன்றாடுவதை பார்க்க முடிகிறது. அதேபோல் தன்னுடைய மகனை சிறையில் அடைத்தால், உடைந்து விடுவார் என்றும், அவரை சீர் திருத்தும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என உறுதியளித்தார். அதேபோல் மகன் சிறையில் அடைக்கப்பட்டால் எங்கள் குடும்பமே உடைந்து விடும் என கெஞ்சியுள்ளார்.
சமீர் வாகேடேவை ஒரு நடிகராக அணுகாமல், தன்னுடைய மகனுக்கு தந்தையாக சாதாரண முறையில் அணுக முயன்றார் ஷாருக்கான். இது குறித்த உரையாடல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாட்டஸ் ஆப் சேட்டிங்கில், ஷாருக்கான் சமீரிடம், "தயவுசெய்து உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு பெரிய விஷயம், என் மகனும் என் குடும்பத்திற்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை என்று சத்தியம் செய்வேன். இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் யாருடனும் பேசுவதைக் கூட தவிர்த்துவிட்டேன்" மனம் உடைந்து பேசியுள்ளார்.
ஷாருக்கானுக்கு பதிலளித்த சமீர் வாகேடே, "அன்புள்ள ஷாருக், சமீபத்திய நிகழ்வுகளால் என் இதயமும் வேதனையடைகிறது. யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது. எங்கள் தரப்பில் இருந்து யாரும் வேண்டுமென்றே ஆர்யனை சிக்கலில் தள்ள விரும்பவில்லை. என்னை நம்புங்கள். சட்டத்தில் சில வழிமுறைகள் உள்ளன அவற்றை மீற முடியாது. பொறுமையாக இருங்கள். விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்கு, சமீர் வான்கடே மற்றும் அவரது உதவியாளர்கள் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்காததற்கு ஈடாக ரூ.18 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அனால் இந்த தகவலை சமீர் வான்கடே மறுத்து வந்தார்.
இன்று வெளியான நீதிமன்ற ஆவணத்தின்படி, நடிகர் ஷாருக்கான், தள்ளுபடி செய்யப்பட்ட தன்னுடைய மகன் போதைப்பொருள் வழக்கில் "ஆர்யன் கானிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு" முன்னாள் NCB ஊழியர் சமீர் வான்கடேவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வான்கடே சமர்ப்பித்த ஆவணத்தில், நடிகர் ஷாருக்கானுக்கும் அவருக்கும் இடையே நடந்த வாட்டஸ் ஆப் உரையாடலை சமர்ப்பித்துள்ளார். இதில் ஷாருக்கான் 2019 இல் மகன் ஆரியனுக்காக வான்கடேவிடம் குடும்பத்தினருக்கும் உதவுமாறு கெஞ்சுவதைக் காண முடிந்தது.