‘நான் பார்த்த முதல் முகம் நீ’ அன்னையர் தினத்தில் அம்மா மீது அன்பை பொழிந்த சினிமா பிரபலங்கள்
அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் தங்களது தாயின் புகைப்படங்களை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தங்களது தாயின் புகைப்படங்களை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்களது தாயாருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிக்கு அன்னையர் தினமான இன்று ஆளுநர் விருது வழங்கி உள்ளார். அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, ஒரு மகளாக, இது என் வாழ்நாள் முழுவதும் போற்றும் தருணமாக இருக்கும்! அன்னையர் தினமான இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள், என் தாய் நாகமணியின் தியாகத்தையும், அவரது பங்களிப்பையும் அங்கீகரித்து, அவர்களுக்கு இந்த நினைவுப் பரிசை வழங்கி உள்ளார். இந்த அங்கீகாரத்திற்காக ஆளுநருக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் தனது தாய் சரிகா உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி ராவ் ஹைடரி தனது தாயை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார், தான் எவ்வாறு தன் தாயை நச்சரித்துக்கொண்டே இருப்பேன் என்பதை விளக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு நகைச்சுவையாக அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... உலகின் சிறந்த அன்னை நீ... நயனின் அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து பாசத்தோடு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்கி
நடிகை ரகுல் ப்ரீத் சிங், சிறுவயதில் தன் தாயுடன் எடுத்த புகைப்படத்தையும், தற்போது தன் தாயுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு என்றென்றும் மாறாத அன்பை கொடுத்த தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்து என பதிவிட்டு உள்ளார்.
நடிகை ஷிவானி, என் வாழ்க்கை இது தான்னு கதையாக சொல்ல... உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்ல. எனக்காக உருக, என் காத திருக, வழிபாத நிலவா, நீ வேணும் நெடுக” என்கிற பாடல்வரிகளை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தனது தாய்க்கு தெரிவித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா, தன் தாயின் புகைப்படங்களை பதிவிட்டு, என்னுடைய பேவரைட் பெண் நீ, இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம் நீ தான். லவ் யூ அம்மா என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஹரிஷ் கல்யான், தான் சிறுவயதில் தன் தாயின் மடியில் அமர்திருக்கும் படியான புகைப்படத்தை பதிவிட்டு, என் உலகம் நீ தான்! எல்லா அம்மாக்களும் தெய்வங்கள் தானே!” என குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை தீபிகா படுகோனே தன் தாய் மற்றும் தன் மகளை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தன் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
நடிகை ராஷி கண்ணா தன் தாயுடன் குழந்தைபோல் ஊஞ்சல் ஆடும் வீடியோவை பதிவிட்டு தனது அன்பான அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தன் தாய் மேனகா உடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, தாய் இல்லாமல் நான் இல்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கேரளா ஸ்டோரியும், ஃபர்ஹானாவும் ஒன்னா.? இஸ்லாமியர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை - இயக்குனர் அமீர்