நயன்தாராவை உலகின் சிறந்த அன்னை என குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வாடகைத்தாய் முறையில் அவர்கள் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது அவர் கைவசம் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இதுதவிர சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார் நயன். மேலும் நயன்தாரா 75, விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் படம் என செம்ம பிசியாக உள்ளார் நயன்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் அதகளம் செய்த நடிகைகளின் லிஸ்ட் இதோ

View post on Instagram

இந்நிலையில், நடிகை நயன்தாரா இன்று தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறார். சர்வதேச அன்னையர் தினமான இன்று, தன் காதல் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார் விக்னேஷ் சிவன். அதுமட்டுமின்றி நயன்தாரா, தன் குழந்தைகளை முதன்முதலில் கையில் ஏந்தியபோது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் விக்கி. மேலும் அந்த பதிவில் உலகின் சிறந்த அன்னைக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். 

View post on Instagram

நயன்தாராவை உலகின் சிறந்த அன்னை என குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா, குழந்தைகளை தூக்கும் போது எந்தவித மேக் அப்பும் போட்டிருக்கமாட்டார் என விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதன்படியே தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திலும் நயன்தாரா எந்தவித மேக் அப்பும் இன்றி காட்சியளிக்கிறார்.

View post on Instagram

இதேபோல் தனது தாயுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் நயன்தாராவின் தாயார் உடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு அவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

View post on Instagram

இதையும் படியுங்கள்... விஜய், அஜித் முதல் தனுஷ் வரை... பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பு இத்தனை கோடியா?