MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய், அஜித் முதல் தனுஷ் வரை... பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பு இத்தனை கோடியா?

விஜய், அஜித் முதல் தனுஷ் வரை... பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பு இத்தனை கோடியா?

விஜய், அஜித், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் போன்ற தென்னிந்திய நடிகர்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 14 2023, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், தனுஷ், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் ஆகியோர் வசித்து வரும் ஆடம்பர வீட்டின் மதிப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

29

விஜய்

நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் வீடு உள்ளது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஆடம்பர பங்களாவை ரூ.35 கோடி செலவில் கட்டி உள்ளார் விஜய். இந்த வீட்டில் தான் தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சொந்தமான மற்றொரு வீடு சாலிகிராமத்தில் உள்ளது. அங்கு விஜய்யின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

39

அஜித்

நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.15 கோடி இருக்குமாம். அங்கு தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் அஜித். 

49

தனுஷ்

நடிகர் தனுஷ் தான் விலையுயர்ந்த பங்களாவை கட்டி உள்ளார். இவர் அண்மையில் போயஸ் கார்டனில் கட்டியுள்ள ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.150 கோடியாம். 4 அடுக்கு கொண்ட இந்த வீட்டில் சகல வசதியும் உள்ளதாம். மனைவி ஐஸ்வர்யா பிரிந்து சென்றுவிட்டதால் தற்போது தனது பெற்றோருடன் மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார் தனுஷ்.

59

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இவருக்கு சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.35 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... உதயநிதியின் ‘மாமன்னன்’ ஆடியோ லாஞ்ச்... சிறப்பு விருந்தினராக வரப்போவது இவர்களா..! பெயரை கேட்டாலே அதிருதே

69

சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருந்தாலும், அவர் குழந்தைகளின் படிப்புக்காக அண்மையில் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அதன்படி மும்பையில் அவர் வாங்கி உள்ள வீட்டின் மதிப்பு ரூ.70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 9 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த ஆடம்பர பங்களாவில் தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன் தேவ், மகள் தியா ஆகியோருடன் வசித்து வருகிறார் சூர்யா.

79

பிரபாஸ்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தவர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் பிரபாஸுக்கு ஐதராபாத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது. அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார் பிரபாஸ்.

89

அல்லு அர்ஜுன்

புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆன நடிகராக மாறிவிட்டார் அல்லு அர்ஜுன். இவருக்கு ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் அல்லு.

99

ராம்சரண்

ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் உலகளவில் பேமஸ் ஆன நடிகராகிவிட்டார் ராம்சரண். இவருக்கு ஐதராபாத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா உள்ளது. அங்கு தனது மனைவி உப்பாசனா உடன் வசித்து வருகிறார் ராம்சரண்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட்டை வெளியிட்ட தாய் ஷோபா... இத சாப்பிட்டு தான் தளபதி இவ்ளோ பிட்டா இருக்காரா...!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Recommended image2
என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!
Recommended image3
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved