நடிகர் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட்டை வெளியிட்ட தாய் ஷோபா... இத சாப்பிட்டு தான் தளபதி இவ்ளோ பிட்டா இருக்காரா...!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட் என்ன என்பதை அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் உள்ள டாப் நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவருக்கென தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் தான் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த மாதம் நடிகர் விஜய், அவரது தாய் ஷோபா சந்திரசேகர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது. ஆனால் அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இல்லாததால், அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை, காரணமாக தான் விஜய் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவில்லை என சர்ச்சை எழுந்தது.
இதையும் படியுங்கள்... விஷாலுக்கு மாஸ் வெற்றியை கொடுக்குமா மார்க் ஆண்டனி? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
இதனிடையே அந்த போட்டோ எடுத்ததன் பின்னணி குறித்து விஜய்யின் தாயார் ஷோபா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி ஷோபா - எஸ்.ஏ.சி ஜோடியின் 50-வது திருமண நாள் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கொண்டாடி உள்ளனர். அப்போது திருமண நாள் குறித்து தன் மகனுக்கு போனில் தெரிவித்ததும் வீட்டுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பி வந்துவிட்டாராம் விஜய்.
வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ் அப் டிபி வைப்பதற்காக போட்டோ எடுக்க வேண்டும் என விஜய்யிடம் கேட்டுள்ளார் ஷோபா. உடனே தரையில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டாராம் விஜய். அன்றைய தினம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருந்ததால் அந்த போட்டோவில் அவர் இல்லை என்று கூறியுள்ளார் ஷோபா.
மேலும் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து ஷோபா சொன்ன தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நடிகர் விஜய்யின் பிட்னஸ் ரகசியம் தோசை தானாம். காலையில் 2 தோசை, இரவில் 2 தோசை எடுத்துக்கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்வதனால் தான் விஜய் இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறார் என ஷோபா தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தோசை தான் விஜய்யின் பிட்னஸ் ரகசியமா என வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... எனக்கு விவாகரத்து கொடுக்காம வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்துகிறார்- பிக்பாஸ் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்