உதயநிதியின் ‘மாமன்னன்’ ஆடியோ லாஞ்ச்... சிறப்பு விருந்தினராக வரப்போவது இவர்களா..! பெயரை கேட்டாலே அதிருதே
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கடைசி படமான மாமன்னன் இசை வெளியீட்டு விழாவுக்கு கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த இவர், எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான பின்னர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டிய உதயநிதி ஸ்டாலின், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார்.
இதையடுத்து அரசியலில் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ ஆன பின்னரும் படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்தாண்டு இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர், அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட்டை வெளியிட்ட தாய் ஷோபா... இத சாப்பிட்டு தான் தளபதி இவ்ளோ பிட்டா இருக்காரா...!
அவரின் கடைசி படமாக மாமன்னன் இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். அந்த கடைசி படம் தான் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் 1-ந் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
உதயநிதியின் கடைசி படம் என்பதால் இதன் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம். முக்கியமாக நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியும் கமலும் இதற்கு முன் ஒன்றாக பங்கேற்ற பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ லாஞ்ச் வேறலெவலில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஷாலுக்கு மாஸ் வெற்றியை கொடுக்குமா மார்க் ஆண்டனி? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு