தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் கலக்கிய நடிகைகளை பற்றி பார்க்கலாம்
Image credits: Google
சரண்யா பொன்வண்ணன்
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். இவர் அம்மா கேரக்டரில் நடித்து தேசிய விருதும் வாங்கி உள்ளார்.
Image credits: google
லட்சுமி ராமகிருஷ்ணன்
சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, நாடோடிகள் போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருந்தார்.
Image credits: Google
ரேணுகா சவுகான்
சீரியல் நடிகையான ரேணுகா சவுகான், அயன், வெற்றிவேல், கருப்பன் போன்ற பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் அம்மாவாக நடித்து அசத்தி உள்ளார்.
Image credits: Google
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்த பவர்புல்லான அம்மா கேரக்டரை யாராலும் மறக்க முடியாது.
Image credits: Google
கோவை சரளா
காமெடி நடிகையான கோவை சரளா தமிழில் காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார்.
Image credits: Google
நதியா
80ஸ் கனவுக்கன்னியான நடிகை நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்த அம்மா கேரக்டர் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
Image credits: Google
ராதிகா
நடிகை ராதிகா கடந்தாண்டு அம்மா கேரக்டரில் நடித்த யானை, லவ் டுடே மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய 3 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
Image credits: Google
ஊர்வசி
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் காமெடியான அம்மா கேரக்டரில் நடித்த ஊர்வசி, சூரரைப் போற்று படத்தில் சீரியஸ் ரோலில் பின்னி பெடலெடுத்து இருந்தார்.