நடிகை விஜே சித்ரா நேற்று முன்தினம், ஷூட்டிங் முடிந்து... நசரத்பேட்டை ஓட்டலில் தங்கியுள்ளார். இவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமத்தும் உடன் இருந்தார். இருவருக்கும் அன்று இரவு என்ன பிரச்சனை நடந்தது என்பது இதுவரை வெளியாகாத நிலையில், மன அழுத்தம் காரணமாக சித்ரா அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்..! சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..!
 

குளிக்க போவதாக தன்னை வெளியே அனுப்பிய சித்ரா நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி வந்து கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் ஹேம்நாத்திடம் இரண்டாவது நாளாக இன்றும் சித்ரா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...  தன்னுடைய மகள் கடைசியாக இரவு 8 மணிக்கு தன்னிடம் பேசியதாகவும். அப்போது ஸ்டார் மியூசிக் ஷூட்டிங்கில் இருப்பதாக தெரிவித்ததாகவும்,  தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் மாத்திரை போட்டதும் தூங்கி விட்டேன். காலை 5 மணிக்கு சித்ராவின் மாமியார் தனக்கு போன் செய்து சித்ரா நம்மை மோசம் செய்து விட்டு போய் விட்டால் என கூறிய பின்னரே இந்த விஷயம் தங்களுக்கு தெரிய வந்ததாக கூறினார்.

மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: தற்கொலை முன் முதல் முறையாக சித்ரா சொன்ன விஷயம்..? நடிகை சரண்யா பரபரப்பு பேட்டி..!
 

பொதுவாக சித்ரா எந்த ஷூட்டிங் சென்றாலும் அவருடன் நானும் செல்வேன். ஹேம்நாத்துக்கும் - சித்ராவிற்கும் பதிவு திருமணம் ஆகி விட்டதால், அவரது பாதுகாப்பிலேயே சித்ரா இருந்தார். மற்றபடி இருவரும் நன்றாக தான் பேசி கொண்டு இருந்தார்கள் என்றும், இடையில் என்ன பிரச்சனை அவர்களுக்குள் வந்தது என்பது தனக்கு தெரியாது என சித்ராவின் தாய் செய்தியாளர்களிடம் கதறியபடி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: இதயம் நொறுங்கி விட்டது... வி.ஜே.சித்ரா மரணம் குறித்து பாண்டியன் ஸ்டோர் மீனா போட்ட பதிவு..!
 

அதே போல் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது. மிகவும் தைரியமானவள். தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கூட அறிவுரை வழங்கி, அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டு கொண்டு வருபவர் என்றும் அவரை அடித்து கொலை செய்துள்ளார் ஹேம்நாத் என தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என மகளை இழந்த பெத்த வயிறு எரிய கதறி அழுதபடி தன்னுடைய ஆதங்கத்தை செய்தியாளர்கள் முன் கொட்டியுள்ளார் சித்ராவின் தாயார்.