விஜயகுமார் மகளா இது? 50 வயதிலும் அழகு தேவதையாக மிளிரும் அனிதா - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா, தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து உகாதி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

Anitha Vijayakumar Instagram Photos
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா பக்கம் தலைகாட்டாத ஒருவர் என்றால் அது அவரின் இரண்டாவது மகள் அனிதா தான். நடிகர் அருண் விஜய்யின் அக்காவான இவர், டாக்டருக்கு படித்து அதன்பின் தன் உடன் படித்தவரையே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே மருத்துவர்கள் தான். அனிதாவின் கணவரும் மருத்துவர் தான். தோஹாவில் இருந்த அனிதா, கடந்த 2024-ம் ஆண்டு இந்தியாவில் பெரிய பங்களா கட்டி இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
அனிதா விஜயகுமார் போட்டோஸ்
அனிதா விஜயகுமார் சினிமா உலகில் நிறைய தோழிகள் உண்டு. அவர் தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டில் உகாதி பண்டிகை கொண்டாட்டத்துக்காக சென்றிருந்தபோது அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் அருண் விஜய் மனைவி ஆர்த்தி மற்றும் இயக்குநர் ஹரியின் மனைவி ப்ரீத்தா ஆகியோருடன் போஸ் கொடுத்துள்ளார்.
சுஜா வருணி உடன் அனிதா
உகாதி கொண்டாட்டத்தில் பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணியும் கலந்துகொண்டார். அவருடன் அனிதா விஜயகுமார் எடுத்த புகைப்படம் தான் இது. சுஜா வருணி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் முன்னாள் மனைவி மலர்
அனிதா விஜயகுமாரின் தோழிகளில் இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவி மலரும் ஒருவர். பாலா உடன் விவாகரத்து பெற்ற பின்னர் பட விழாக்களில் தலைகாட்டாமல் இருந்தாலும் இதுபோன்ற பங்க்ஷன்களில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார் மலர்.
ஹரி மனைவியுடன் அனிதா
விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் முதல் மனைவியின் மகள் அனிதா, இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் ப்ரீத்தா. அவர் இயக்குநர் ஹரியை திருமணம் செய்துகொண்டார். ப்ரீத்தாவும், அனிதாவும் உடன்பிறந்த சகோதரிகள் போலவே பழகி வருகிறார்கள்.
செல்பி
அனிதா விஜயகுமார் தன்னுடைய தோழியான மலர் மற்றும் தன்னுடைய சகோதரியான ப்ரீத்தா ஆகியோருடன் ஒன்றாக செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் இது.
சினிமா வாய்ப்பை நிராகரித்த அனிதா
அனிதா விஜயகுமார் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறி இருந்தோம். ஆனால் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஆஃபர் வந்தது. இயக்குநர் பாரதிராஜா தான் இயக்கிய கருத்தம்மா படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்க முதன்முதலில் அனிதாவை தான் அணுகினாராம். ஆனால் அந்த நேரத்தில் படிப்பு தான் முக்கியம் என சொல்லி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் அனிதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

