சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின் சீரியல் நடிகையாக மாறியவர் வி.ஜே.சித்ரா. விரையில் இவரை திருமண கோலத்தில் பார்ப்போம் என நினைத்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது சித்ரா ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிர் விட்டுள்ள சம்பவம்.

மேலும் செய்திகள்: சித்ராவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதா..? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்..!
 

பல்வேறு மர்மங்கள் நீடிக்கும் இவரது மரணம் குறித்து போலீசார் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். அதே போல், இவரது வருங்கால கணவர் ஹேமந்த்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவிற்கும், தனக்கும் கடந்த அக்டோபர் மாதம், 19 ஆம் தேதி திருமணம் நடந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து, ஆர்.டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு,  போரூர் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின்பே, சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும்.

இந்நிலையில், நேற்று தன்னுடன் சிரித்து பேசி நடித்த சித்ரா இன்று உயிருடன் இல்லை என்கிற அதிர்ச்சியை தாங்க முடியாமல், இவருடைய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:பிணவறை ஸ்டெக்சரில் சடலமாக கிடக்கும் விஜே சித்ரா... மனதை பதறவைக்கும் போட்டோஸ்..!
 

 

அந்த வகையில் தற்போது, விஜே சித்ரா விஜய் டிவியில் நடித்து வரும், முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, தன்னுடைய "இதயம் நொறுங்கி விட்டதாகவும், நீ இப்படி செய்திருக்க கூடாது என்றும் இந்த செய்தி தன்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டதாகவும் கூறி பதிவிட்டுள்ளார்".

அந்த பதிவு இதோ...