தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளை கொடுத்த அசத்தல் பரிசு...!

இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுவிட்டது. மேலும் சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால்,  அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.  மேலும்,  இவர் ஒரு வருட காலமாக  நீடிப்பார் எனவும்  அரசாணை பிறப்பித்தது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

இந்நிலையில்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிறப்பு அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒருவருடத்திற்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறபித்துள்ளதாக நீதிமன்றத்தில்  தெரிவித்தார். 

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவிக் காலம் மார்ச் மாதம்  முடிவடைவதால்,  தயரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வாதிட்டார்.  தற்போது,  தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் ராம மூர்த்தி, ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்தி முடித்து, ஜூலை 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வாகிக்க தனி அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நடிகர் விஷால் வாபஸ் பெற்றார்.