தனது எதார்த்தமான காமெடி மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் யோகிபாபு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான இவரது திருமணம் கடந்த 5 ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றது. சில உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ, பார்கவி என்பவரை கரம் பிடித்தார் யோகிபாபு. குடும்ப சூழ்நிலை காரணமாக யாருக்கும் திருமணம் குறித்து தெரிவிக்க முடியவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

யாருக்கும் சொல்லாமல் யோகிபாபு திடீர் திருமணம் செய்து கொண்டது திரைத்துறையினர் இடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங், நெல்லையில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: சனம் ஷெட்டியை தர்ஷன் கழட்டிவிட காரணம் இதுதான்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

திருமணம் முடிந்து மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பிய யோகிபாபுவிற்கு தனுஷ் தங்க சங்கிலி ஒன்றை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து படக்குழுவினருடன் யோகிபாபு கேக் வெட்டி கொண்டாடினார். படக்குழுவினரின் இந்த செயல் யோகிபாபுவிற்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும், வரும் மார்ச் மாதம் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிளான் செய்துள்ளாராம் யோகிபாபு. அந்த நிகழ்ச்சியில் தான் ஆசைப்பட்ட அத்தனை திரைப்பிரபலங்களையும் அழைத்து ஜமாய்க்க திட்டமிட்டுள்ளாராம்.