'சந்திரமுகி 2 ' திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நடிகர் - நடிகை தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரை சந்திரமுகி 2 படம் குறித்து படக்குழுவினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருக்கு பதில் மற்றொரு பிரபல நடிகை நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: புற்றுநோயால் நேர்ந்த சோகம்! 26 வயதே... ஆன இளம் நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!
 

மலையாளத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு 'சந்திரமுகி' திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஓடவைத்தது. 

மேலும் செய்திகள்: ஓவர் கிளாமரில்... தளபதியின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடல் குலுங்கு குலுங்க ஆட்டம் போட்ட கிரண்! ஹாட் வீடியோ
 

இந்த மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்து விட்டார் பி. வாசு. இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில் மற்ற தகவல்களும் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளது. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா கூட, சந்திரமுகி 2 படம் குறித்து தன்னிடம் படக்குழுவினர் யாரும் பேசவில்லை என தெரிவித்தார். இதனால் ஜோதிகா இரண்டாவது பாகத்தில் நடிப்பாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகருடன் காதல் திருமணம்... கள்ளக்காதல் பிரச்சனை! 4வது முறையாக பெயரை மாற்றி தமிழில் கவனம் செலுத்தும் நடிகை!
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகை ஜோதிகாவுக்கு பதில், சிம்ரனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கோலிவுட் திரையுலகில் சில பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தான். இவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. திடீர் என, இவர் கர்ப்பமானதால்... இந்த படத்தை விட்டு விலகினார். இதன் பின்னரே இந்த படத்தில் ஜோதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை முதல் பாகத்தில் விட்ட வாய்ப்பை இரண்டாம் பாகத்தில் பிடிக்க மும்முரம் காட்டுகிறாரா சிம்ரன்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.