தமிழ் சினிமாவில் காதல் திருமணம், கள்ளக்காதலர்கள்  போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றி தமிழ் சினிமாவில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். அவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.

தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து நெடுநல்வாடை படத்தை முடித்தனர் படக்குழுவினர்.

மேலும் செய்திகள்: ஐயோ பாவம்... நாகினிக்கு வந்த சோதனை? 4 நாள் உடையுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கு மௌனிராய்!
 

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து இருவரும் ரகசியமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்கினர். முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.

பின்னர் அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வு... கையில் மண்வெட்டியை பிடித்து விவசாயத்தில் இறங்கிய இளம் ஹீரோ..!
 

இந்நிலையில் அதிதீ மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்தேனே தவிர… திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. 

பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிதி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் சமூக சேவை என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி அபி ஏமாற்றி வருகிறார் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: 8 ஆண்டுகளுக்கு பின்... சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா!
 

பதிலுக்கு அபியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதிதி மேனன் வேறுஒருவருடன் உள்ள தொடர்பு காரணமாகவே அபி சரவணனை விட்டு பிறந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் , அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், மலையாள படங்களில் தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என மாற்றி கொண்டு நடிக்க துவங்கியுள்ளார். மேலும் அம்மணியின் கவனம் தற்போது தமிழ் திரையுலகின் மீதும் திரும்பியுள்ளது. நான்காவது முறையாக பெயரை மாற்றி இவர் களமிறங்கியுள்ளது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.