Asianet News TamilAsianet News Tamil

ஒலிம்பிக் செல்லும் இந்திய அணிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியீடு!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி மூலம் வெளியிட்டார்.
 

central minister released by  AR Rahman encourage  indian Olympics team song
Author
Chennai, First Published Jul 15, 2021, 12:06 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி மூலம் வெளியிட்டார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர்  அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்: புல்லரிக்க வைத்த பிரமாண்டம்... மிரட்டலாக வெளியான 'RRR' மேக்கிங் வீடியோ..!
 

central minister released by  AR Rahman encourage  indian Olympics team song

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் நிசித் பிரமானிக், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரீந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி கமாண்டர் ராஜகோபாலன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்: நடிகர் ரகுமான் வீட்டில் நடந்த சோகம்... கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
 

central minister released by  AR Rahman encourage  indian Olympics team song

'இந்துஸ்தானி வழி' என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலுக்கு புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இளம் பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார். கடினமான நேரங்களில் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கலைஞர்களை அனுராக் தாக்கூர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்: கழுத்தில் கரன்சி மாலையோடு... மகளோடு குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்! வைரலாகும் போட்டோஸ்!
 

"ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லா ஆகியோருக்கு இந்த முயற்சிக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான இந்த கொரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் இந்த பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இந்த பாடலை எந்த அளவு முடியுமோ அந்தளவு பகிருமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று தாக்கூர் கூறினார்.  

central minister released by  AR Rahman encourage  indian Olympics team song

டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சியாக இந்த பாடல் அமைந்துள்ளதாக  நிசித் பிரமானிக் கூறினார்.

மேலும் செய்திகள்: சல்வாரில் செம்ம அழகு... சிரிப்பை சிதறவிட்டு இளசுகளை கிறங்கடிக்கும் வாணி போஜன்...!
 

"டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க #Cheer4India என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இதற்கு ஒட்டுமொத்த நாடும் முழு மனதுடன் ஆதரவளித்து வருகிறது. இந்த பிரமாதமான பாடலுக்காக இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கும், இளம் கலைஞர் அனன்யா பிர்லாவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios