Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ரகுமான் வீட்டில் நடந்த சோகம்... கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

பிரபல நடிகர் ரகுமானின் தாய் சாவித்திரி நாயர் வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 :30 மணிக்கு பெங்களூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 84 .
 

actor rahman mother death at 84
Author
Chennai, First Published Jul 15, 2021, 10:35 AM IST

பிரபல நடிகர் ரகுமானின் தாய் சாவித்திரி நாயர் வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 :30 மணிக்கு பெங்களூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 84 .

நடிகர் ரகுமான் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) காலை கேரளா, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் நடக்கும் என தெறிக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை கே. முகமது அப்துல் ரஹ்மான் கடந்த டிசம்பர் 2018 -ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.  

actor rahman mother death at 84

கடந்த 1983 ஆம் ஆண்டு மலையாள சினிமாவின் மூலம், தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் இவர் தமிழில் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான, புது புது அர்த்தங்கல், சங்கம், ராம், பில்லா, சிங்கம் II, 36 வயதினிலே, போன்றவை சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகும்.

actor rahman mother death at 84

தற்போது ஜெயம் ரவியின் ஜன கண மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2  மணி ரத்னத்தின் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிய மல்டி ஸ்டாரர் வரலாற்று படமான 'பொன்னியன் செல்வன்' ஆகிய படைகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவரது தாயின் இழப்பு நடிகர் ரஹ்மானுக்கு ஈடு இணையில்லா இழப்பாகும். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இவரது தாயார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios