கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட 'RRR' படம் குறித்த முக்கிய தகவலை இன்று வெளியிட போவதாக சஸ்பென்சோடு அறிவித்த படக்குழு, சற்று முன் இந்த படத்தின் பிரமாண்ட மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மிரள வைத்துள்ளது. 

கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட 'RRR' படம் குறித்த முக்கிய தகவலை இன்று வெளியிட போவதாக சஸ்பென்சோடு அறிவித்த படக்குழு, சற்று முன் இந்த படத்தின் பிரமாண்ட மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மிரள வைத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தின் மூலம் அடுத்த பிரமாண்ட படைப்பை உருவாக்கி உள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள, மேக்கிங் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.

இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தாறுமாறாக வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியது. பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் சில பேட்ச் ஒர்க் மட்டுமே மீதம் உள்ளதாக படக்குழு அறிவித்தது. எனவே விரைவில் படப்பிடிப்பு மீண்டும் துவங்குவது குறித்து படக்குழு தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக தற்போது மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோ இதோ... 

Scroll to load tweet…