கழுத்தில் கரன்சி மாலையோடு... மகளோடு குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்! வைரலாகும் போட்டோஸ்!
நடிகை வனிதா விஜயகுமார் குபேர பூஜை செய்த புகைப்பங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை மஞ்சுளா - நடிகர் விஜயகுமார் தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வனிதா, ஹீரோயினாக சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தவர் அதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. 2 முறை திருமணம் செய்து கொண்ட வனிதா இருவரையுமே டைவர்ஸ் செய்துவிட்டார்.
தனது மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவிற்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் மீண்டும் பிரபலமானார்.
அதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகள், யூ-டியூப் சேனல் என மிகவும் பிசியாக வலம் வந்த வனிதா, மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலின் குடிப்பழக்கம் காரணமாக வனிதா அவரை விட்டு பிரிந்து. தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
மேலும் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. இதுகுறித்த புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.
கடந்த வருடம் பீட்டர் பாலுடன், குபேர பூஜை செய்த... வனிதா இம்முறை, தன்னுடைய மூத்த மகளுடன் சேர்ந்து பூஜை செய்து கழுத்தில் கரன்சி மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.