Asianet News TamilAsianet News Tamil

Pushpa movie : சர்ச்சையில் சிக்கிய சமந்தாவின் ஐட்டம் பாடல்... தடை செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு

'புஷ்பா' (Pushpa) படத்தை புரமோட் செய்யும் வகையில், அப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா (Samantha) கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். 

Case filed against Samanthas item song in Pushpa movie
Author
Andhra Pradesh, First Published Dec 12, 2021, 5:00 PM IST

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 

Case filed against Samanthas item song in Pushpa movie

இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Case filed against Samanthas item song in Pushpa movie

இப்படம் வருகிற டிசம்பர் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா (Samantha) கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

Case filed against Samanthas item song in Pushpa movie

அதன்படி, இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி சிலர் ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios