Aranmanai 4 : மீண்டும் கோதாவில் குதித்த கோலிவுட்.. குடும்பங்கள் கொண்டாடும் அரண்மனை 4 - முதல் நாள் வசூல் என்ன?

Aranmanai 4 Day 1 Collection : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரண்மனை 4 படம் நேற்று மே 3ம் தேதி உலக அளவில் வெளியானது.

Director sundar c aranmanai 4 movie starring tamannaah bhatia day 1 collection report ans

தமிழ் திரை உலகில் "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி தமிழ் சினிமாவின் கமர்சியல் மன்னனாக கடந்த 29 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்கின்ற திரைப்படம் வெளியானது. 

அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அந்த படத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகிய பாகங்களை எடுக்க சுந்தர்சியை உத்வேகப்படுத்தியது என்றால் அதில் மிகையல்ல. இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இணைந்து நடித்துள்ள சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் நேற்று மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

Anchor DD : புர்ஜ் கலிஃபாவை மறைக்கும் பேரழகு.. நீச்சல் குளத்தில்.. பின்னழகில் மயக்கும் DD - வைரல் வீடியோ!

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. இந்த வருடம் துவங்கியதிலிருந்து பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்காமல் இருந்து வந்த கோலிவுட் உலகிற்கு தனது முதல் வெற்றியை பரிசாக அளித்து இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் வெளியான அறிக்கைகளின்படி, அரண்மனை 4 இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியான முதல் நாளில் சுமார் 3.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரையரங்குகளில் 36.04% ஆக்கிரமிப்பு அளவை தொடர்ச்சியாக பெற்றுவருகிறது அரண்மனை 4. சிவகார்த்திகேயன் வழங்கும் குரங்கு பெடல் படம் அதே மே 3ம் தேதி வெளியாகியிருந்தாலும், கமெர்ஷியல் வெற்றி படமாக மாறியுள்ளது அரண்மனை 4. 

அரண்மனை 4ல் நடிகர் நடிகைகள் தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, கோவை சரளா, VTV கணேஷ், யோகி பாபு, டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே அரண்மனை படத்தி 3 பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Nayanthara: ஏர்போர்ட்டில் கூட.. குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளும் நயன்தாரா! வைரலாகும் வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios