விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கருடன் வானில் வட்டமிட்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மியாட் மருத்துவமனையில் உயிர்விட்ட விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து இன்று காலை அவரின் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு பிரியாவிடை அளித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கருடன் வானில் வட்டமிட்ட சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. விஜயகாந்தின் உடல் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்து சென்ற போது கருடன் வானில் 3 முறை வட்டமிட்டது. விஜயகாந்தின் பிரேமலதா, மகன்கள் உட்பட அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கினர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…

இதை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க கேப்டனின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரின் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்கச் செயின், மோதிரம், கண்ணாடி அணிந்தே அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.. அப்படி என்ன கோபம்? - கேப்டன், வடிவேலு பிரச்சனை பற்றி பேசிய பிரபலம்!