இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.. அப்படி என்ன கோபம்? - கேப்டன், வடிவேலு பிரச்சனை பற்றி பேசிய பிரபலம்!
Vijayakanth and Vadivelu Issue : கடந்த டிசம்பர் 28ம் தேதி பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
Rajinikanth
நேற்று, விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்கள் படங்களுக்கான ஷூட்டிங் இருந்தபோதும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து தங்கள் இரங்கல்களை கேப்டனுக்கு செலுத்தினர்.
Vijay
குறிப்பாக தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுத்த காட்சிகள் மக்கள் மனதை கலங்கடித்து. ஆனால் விஜயகாந்த் அவர்களின் படங்கள் மூலம் புகழ் பெற்ற வைகை புயல் வடிவேலு மட்டும் இறுதிவரை அவர் பூத உடலை பார்க்க வரவில்லை, ஏன் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
Vadivelu and vijayakanth
ஒரு நடிகராக நீங்கள் ஜெய்திருக்கலாம், ஆனால் மனிதாக இப்பொது தோர்த்துவிடீர்கள் என்று இணையத்தில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே இந்த மோதல் போக்கு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் தியாகு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
Thiyagu
நடிகர் தியாகு விஜயகாந்த் அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் வெளியிட்ட தகவலின் படி, பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார். அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் இருந்துள்ளது. அங்கு அவருடைய இறப்பிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டு அருகே வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத வடிவேலு, "என் வீட்டு பக்கம் என் வண்டியை நிறுத்துறீங்க, வண்டி எல்லாம் எடுங்க" என்று கோபமாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. சாவு வீட்டுக்கு வந்தவர்கள் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு விடுவார்கள். அதுவரை பொறுத்துக்கொள்ளக் கூடாதா? இப்படி கோபமாக பேச வேண்டுமா? என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்க, அதற்கும் மரியாதை இல்லாமல் அவர்களை மீண்டும் திட்டி அந்த கார்களை எடுக்கச் செய்துள்ளார். அதன் பிறகு இந்த செய்தி விஜயகாந்த் அவர்களுடைய காதிற்கும், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் காதுக்கும் சென்றுள்ளது. இந்த சிறு பிரச்சனை தான் பின் பூதாகரமாக வெடித்து இருவரும் பிரியும் முக்கியமாக காரணமாக மாறி உள்ளது.