MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பார்ட் 1 வெற்றி தான் பார்ட் 2வை முடிவு செய்யும்.. பக்கா பிளானோடு காத்திருக்கும் ரவி - அயலான் கம்மிங் சூன்!

பார்ட் 1 வெற்றி தான் பார்ட் 2வை முடிவு செய்யும்.. பக்கா பிளானோடு காத்திருக்கும் ரவி - அயலான் கம்மிங் சூன்!

Sivakarthikeyan Ayalaan : பல ஆண்டு காத்திருப்பு பிறகு வருகின்ற ஜனவரி 12ம் தேதி உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்.

1 Min read
Ansgar R
Published : Dec 30 2023, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ayalaan Movie Team

Ayalaan Movie Team

தமிழ் திரையுலகில் தற்பொழுது முன்னணி நாயகனாக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடந்த சில ஆண்டுகளாகவே தான் நடிக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நல்ல திரைப்படங்களாக கொடுத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் சிவாவுக்கு ஒரு நல்ல மனசு உள்ளது.

விஜயகாந்த் பெயரில் விருது.. 3 முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு வைத்த.. திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்

23
Sivakarthikeyan

Sivakarthikeyan

தற்பொழுது தனது அயலான் திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சிவகார்த்திகேயன், தனது திரை வாழ்க்கையில் மக்கள் ரசிக்கும் வண்ணம் நல்ல படங்களை மட்டுமே கொடுப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அயலான் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் இதுவரை எந்த பணமும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அது போல இயக்குனர் ரவிக்குமார் அவர்களும் இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக இதுவரை சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

33
Ravikumar

Ravikumar

வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக அயலான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை பொருத்து தான் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். காரணம், அயலான் படத்தை காட்டிலும் அதனுடைய இரண்டாம் பாகம் எடுப்பதற்கு, VFX காட்சிகளுக்கு மட்டும் சுமார் 4 மடங்கு அதிகம் செலவாகும் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே சிவாவிடம் பார்ட் 2-விற்கான கதையை கூறி அவருக்கும் அது பிடித்துள்ளதாகவும் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved