Asianet News TamilAsianet News Tamil

#Breaking நடிகையின் பாலியல் புகார் வழக்கு..! முன்னாள் அமைச்சர் கைது குறித்து நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

'நாடோடிகள்' படத்தில் நடித்திருந்த துணை நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மீது கொடுத்த பாலியல் வழக்கில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் மணிகண்டன் சென்னை உயர்நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

Breaking Actress sexual harassment case Court rules on arrest of former minister
Author
Chennai, First Published Jun 3, 2021, 3:41 PM IST

'நாடோடிகள்' படத்தில் நடித்திருந்த துணை நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மீது கொடுத்த பாலியல் வழக்கில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் மணிகண்டன் சென்னை உயர்நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்: சூரிய ஒளி வெளிச்சத்தில்... கீர்த்தி செய்த யோகாவை பார்த்து உருகி போன இளம் நெஞ்சங்கள்..!
 

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசிய குடியுரிமை பெற்ற இவர், மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் அவரது நண்பர் பரணி என்பவர் மூலம் நடிகைக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். முதலில் அமைச்சரின் ஆசைவார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

Breaking Actress sexual harassment case Court rules on arrest of former minister

 நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன் பலமுறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: அம்மாவுடன் வந்து உதயநிதியை சந்தித்த வரலட்சுமி..! 2 டன் உணவு வழங்கி அசத்தல்..!
 

Breaking Actress sexual harassment case Court rules on arrest of former minister

இதையடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை விசாரித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் , பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது கைது நடவடிக்கை பயந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரேயாவை... அலேக்கா தூக்கி கொண்ட கணவர்..! ரொமான்டிக் போட்டோஸ்..!
 

மேலும் இவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று, சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரபலமானவர்களை டார்கெட் செய்து நடிகை தொடர்ந்து பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், மலேஷியாவில் பலரை அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Breaking Actress sexual harassment case Court rules on arrest of former minister

அதே போல் நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை பரணி திருப்பி கேட்டது முதல் தன்னை பிளாக்மெயில் செய்ய துவங்கியதாகவும் முன்னாள் அமைச்சர்  மணிகண்டன் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறாரா மிக முக்கிய பிரபலம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
 

மேலும், நடிகை சாந்தினியை மிரட்டவில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios