Asianet News TamilAsianet News Tamil

அம்மாவுடன் வந்து உதயநிதியை சந்தித்த வரலட்சுமி..! 2 டன் உணவு வழங்கி அசத்தல்..!

'Save Shakti Foundation' அமைப்பின் நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார், மற்றும் இந்த அமைப்பின் இணை நிறுவனருமான அவரது அம்மா சாயா தேவியுடன் வந்து, திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 2 டன் உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.
 

varalakshmi donate 2 ton animals food
Author
Chennai, First Published Jun 3, 2021, 1:26 PM IST

'Save Shakti Foundation' அமைப்பின் நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார், மற்றும் இந்த அமைப்பின் இணை நிறுவனருமான அவரது அம்மா சாயா தேவியுடன் வந்து, திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 2 டன் உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிப்பை தாண்டி தன்னால் முடிந்தவரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்க்கை சீற்றங்கள் போது, நடிகர் சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதோடு மட்டும் இல்லாமல், கடந்த வருடம் கொரோனா முதல் அலை தலைதூக்கிய போது, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அம்மாவுடன் சேர்ந்து உணவு வழங்கிய வீடியோக்கள் வைரலாகியது. 

varalakshmi donate 2 ton animals food

மேலும் தற்போது கொரோனா நேரத்தில் உணவில்லாமல் பசியால் வாடும் விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என, ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து வருவதுடன், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள தெருநாய்களுக்கு உணவு வைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில் Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவுவதற்காக  2 டன் உணவு உணவுகளை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தது வழங்கியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது வரலட்சுமியின் தாயாரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

varalakshmi donate 2 ton animals food

இது குறித்து வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது... சேவ் சக்தி அமைப்பின் மூலம் நாங்கள் கொடுத்த இரண்டு டன் உணவுப்பொருட்களை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மூலம் இந்த உணவு பொருட்கள் விலங்குகளுக்கு செல்லும் என்றும் இதற்காக தான் மிகுந்த பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் சேர்த்து,  Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful World - Islamic Foundation Trust - EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்களையும் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios