சூரிய ஒளி வெளிச்சத்தில்... கீர்த்தி செய்த யோகாவை பார்த்து உருகி போன இளம் நெஞ்சங்கள்..!
டென்ஷனை விரட்டுவதற்காக கீர்த்தி செய்த யோகா புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது.
ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் எது வெளியானாலும் அது செம்ம வைரலாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் சூரிய ஒளி மேல படும் படி இவர் செய்துள்ள யோகா புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
டென்ஷனாக இருக்கும் போது இந்த யோகக்கலை செய்தால், மனம் ரிலாக்ஸ் ஆகுமாம். கீர்த்தியின் இந்த யோகா போசுகள் இளம் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.