கமலின் கட்டிப்பிடி வைத்தியத்தை வேற லெவலுக்கு வைரலாக்கிய பாலிவுட் நடிகை... வைரலாகும் வீடியோ...!
"ப்ரீ ஹக்ஸ்" என்ற பலகையை கையில் ஏந்திய படி சாலையில் நின்ற பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டார்.
உலகம் முழுவதும் ஜனவரி 21ம் தேதி சர்வதேச கட்டிப்பிடி தினமாக கொண்டாடப்படுகிறது. அதுதாங்க நம்ம கமல் ஹாசன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கட்டிப்பிடி வைத்தியம்னு ஒரு சீன் வச்சியிருப்பாரே, அதே தான். இந்தியாவில் இந்த தினம் கடைபிடிக்கப்படுவதில்லை என்றாலும், வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இதனை விடுமுறை நாளாக அறிவித்து, செம்ம மாஸாக கொண்டாடுகின்றனர்.
இதையும் படிங்க: தொடை தெரிய ஓவர் கிளாமர் டிரெஸில் கோவிலுக்கு போன பிரபல தொகுப்பாளினி... சரமாரியாக திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்...!
இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், ஏன் நமக்கு யாருன்னே தெரியாதவங்கள கூட கட்டிப்பிடித்து வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறிக்கொள்வார்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து இதயம் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கர்கள் கொண்டாடும் இந்த தினத்தை பாலிவுட் நடிகை ஒருவர் கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி... பட்டுப்புடவையில் எக்கி இடுப்பை காட்டி இளசுகளை விக்கி நிற்க வைக்கும் கவர்ச்சி போஸ்....!
"ப்ரீ ஹக்ஸ்" என்ற பலகையை கையில் ஏந்திய படி சாலையில் நின்ற பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சா சத்தாவை நெட்டிசன்கள் பலரும் ஆகா... ஓஹோ... என பாராட்டி வருகின்றனர்.