நடிகைகளுக்கு போட்டியாக கலர், கலராக போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டுமில்லை, சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திட்டு வாங்குவதிலும் டி.வி. தொகுப்பாளினிகள் போட்டி போடுகின்றனர். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த விஜே ரம்யா, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். படவாய்ப்பிற்காக விதவிதமான புடவையில் அசத்தலாக போஸ்  கொடுத்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். அதோடு சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் "சங்கத்தலைவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது மியன்மாருக்கு சுற்றுலா சென்றுள்ள ரம்யா, அங்கு ஜாலியாக பொழுதை கழிக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: ஆடம்பர வாழ்க்கைக்காக விபச்சாரம்... திருமணமான ஒரே வருடத்தில் டைவர்ஸ்... அடுத்தடுத்து கெட்டழியும் பிரபல நடிகை...!

பேண்ட் போடாமல் தொடை முழுவதும் தெரியும் படியான கவர்ச்சி உடையில், மியான்மரில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தியுள்ளார். அதன் பின்னர் கோவிலுக்கு வெளியே தங்களது வேண்டுதல்களை கூறி சிட்டுக்குருவிகளை பறக்கவிடும் வழிபாடு நடத்தியுள்ளார். 

ஓவர் கிளாமர் டிரஸில் ரம்யா, வழிபாடு நடத்திய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கோவிலுக்கு இப்படித்தான் போவீங்களா?... என சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: 75 வயது தயாரிப்பாளரை 5வது முறையாக திருமணம் செய்த 52 வயது பிரபல நடிகை..!

சிலரோ மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்க? என பங்கமாக கலாய்த்துள்ளனர். பட வாய்ப்பிற்காக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு என்றும், உங்க டிரஸ் நல்லாவே இல்லை என்றும் விஜே ரம்யாவை கிண்டல் செய்து சகட்டு மேனிக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.