மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியம் சென்ற ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் பிரபலம்! வைரலாகும் வீடியோ..!
ஷாலினி அஜித், சமீபத்தில் தன்னுடைய மகனுடன் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்து போட்டியை பார்க்க சென்றபோது, பிரபல பாலிவுட் நடிகர் இவரிடம் வந்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, தன்னுடைய பிள்ளைகள் சற்று பெரிதாக வளர்ந்து விட்டதால்... அவ்வபோது அவர்களுடன் வெளியே வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதேபோல் திருமணம் ஆனதிலிருந்து எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லாமல் இருந்த ஷாலினி, கடந்த ஆண்டு instagram பக்கத்தில் இணைந்தார். அவ்வப்போது இவர் தன்னுடைய கணவர் அஜித்தின் புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, அதுவும் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்படுகிறது.
ரஜினிக்கு தங்கையாக 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!
அஜித் துணிவு படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், தன்னுடைய குடும்பத்தோடு போர்ச்சுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் தற்போது சென்னை திரும்பியுள்ள அஜித், அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த படம் குறித்து இன்று முக்கிய தகவல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லைகா நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம் குறித்து அறிவித்தது ஒருபுறம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், மற்றொரு புறம் அஜித் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக்குடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த எப்.சி கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், ஐ எஸ் எல் என்று சொல்லப்படும் கால்பந்து போட்டியை ஷாலினி கண்டு ரசித்துக்கொண்டிருந்த போது, எப் சி அணியின் உரிமையாளரான பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்,ஷாலினி அஜித் போட்டியை காண வந்துள்ளதை அறிந்து, நேரடியாக அவரை சந்தித்து வரவேற்றார். மேலும் அவரின் மகனையும் வாழ்த்தினார். இது குறித்த கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.