அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் சூப்பர் டூப்பர்  ஹிட்டானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, கதிர், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் நடிக்க வருவதற்கு முன்னதாகவே இந்திரஜா டிக்-டாக் வீடியோ மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அதனால் “பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து இந்திரஜா வெளியிட்ட டிக்-டாக் வீடியோக்கள் தாறுமாறு வைரலானது. 

அந்த படத்தில் விஜய் அவரை  “குண்டம்மா... குண்டம்மா... ”என அழைத்து வெறியேத்தும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் பாண்டியம்மாள்.... இல்லை, இல்லை இந்திரஜா. இந்த சீனில் தன்னை அப்படி அழைத்ததற்காக தளபதி விஜய் தன்னிடம் மன்னிப்புக்கேட்டதாக இந்திரஜா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க:  ஓடிடி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்... பிரதமரிடம் வைத்த அதிரடி கோரிக்கை...!

அவ்வப்போது அம்மா, அப்பா, தங்கையுடன் சேர்ந்து அசத்தலான டிக்-டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான ‘வாத்தி கம்மிங்’ பாட்டிற்கு அப்பா ரோபா சங்கருடன் சேர்ந்து இந்திரஜா போட்ட மாஸ் குத்தாட்டம் சோசியல் மீடியாவில் வைரலானது. நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் விதவிதமாக வாழ்த்து தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!

தற்போது அப்பா, மகள் சூப்பர் காம்பினேஷனில் வெளியாகியுள்ள டிக்-டாக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களின் இசைக்கு இந்திரஜாவும், ரோபோ சங்கரும் அசத்தலாக நடனமாடி தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். அத்துடன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி. நாங்கள் உங்களை மிகவும் விரும்புகிறோம். நீங்க என் வாழ்க்கையில் பெரிய ரோல் ப்ளே பண்ணியிருக்கீங்க. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளில் உங்களோடதும் இருக்கு சார். நீங்க என் மீது ஒரு அப்பா, நண்பன், நலம் விரும்பி  அளவிற்கு அக்கறை செலுத்தினீர்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகும் அந்த வீடியோ இதோ...