பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் கடந்த வாரம், அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கி, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே, தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. 

மேலும் செய்திகள்: இங்க அது இருக்கு..! வார்த்தையை விட்ட சுரேஷ்... அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்! ரவுண்டு கட்டும் வீடியோ..!
 

40 நாட்களை நெருங்கி வரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு தெலுங்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சமூக ஊடகத்தின் மூலம் பிரபலமான பெண்மணி கங்காவா என்பவரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். மிகவும் எதார்த்தமாக விளையாடி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உடனடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மாமருத்துவர் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து பார்த்து விட்டது, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்:தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ மகளா இது? அம்மாவும், பொண்ணும் சேர்ந்து நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்!
 

இதனை அடுத்து மருத்துவரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நாகார்ஜுனா பிக்பாஸிடம் அனுமதி பெற்று அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் கனவுகளுடன் கலந்து கொள்ள வந்த கங்காவா உடல்நல குறைவு காரணமாக வெளியேறியது, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.