விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்  பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற ஐஸ்வர்யா, ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்.  பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளதாகவும், பிக் பாஸை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார்.

பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர்.  ஒரு சிலரோ நீங்கள் கவர்ச்சியில் உங்கள் தோழி யாஷிகாவை பின் பற்றுகிறீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் என்னுடைய எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கு. அது மட்டும் இல்லைங்க படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். ஏன்னா ? நல்ல கதைகளில் நடிக்கணும், அதைவிட முக்கியம் தமிழக மக்களிடையே நல்ல பெயரையும் வாங்கணும் என்ற நோக்கில்தான். இப்ப நல்ல கதையாக இருந்தால் படம் வெளியே வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போட்ட உழைப்பு வீணாகாமலும், தியேட்டர்களில் போடும் வகையில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்கிறார்.