பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். 

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் போட்டியாளர்:

நடப்பு ஆண்டுக்கான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக தொடங்கியது. 8ஆவது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசசானது புரியாத புதிராக பல சுவாரஸ்யங்கள் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் போட்டியாளர்:

திவாகர் என்று சொன்னால் தெரியாது... வாட்டர்மிலன் ஸ்டார் என்று சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர், மதுரையை பூர்வீகமாக கொண்ட திவாகர், சோசியல் மீடியாவில் கோமாளித்தனமான வீடியோக்கள் மூலம் பிரபலமானார், கடந்த சில மாதங்களுக்கு முன் அதே சோசியல் மீடியாவில் கடும் ட்ரோல்களையும் சந்தித்து இருந்தார்.

தொட்டது எல்லாம் பொன்னாகும் வீடு; பிக் பாஸ் தமிழ் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டுள்ளார். வாட்டர்மெலனே அவருக்கு இந்த அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொன்ன விதம் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த வீட்டிற்குள் உங்களது விளையாட்டை ஆடுவதற்கான முடிவாக நீரும், நெருப்பும் என்று என்று பாக்ஸ் வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் எடுக்கும் பேட்ஜை பொறுத்து தான் அவர்களது போட்டி ஆரம்பமாகும். அதன்படி பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளரான வாட்டர்மெலன் ஸ்டார் சிகப்பு நிறம் கொண்ட பாக்ஸை எடுத்தார்.

அய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!

Scroll to load tweet…

2ஆவது போட்டியாளர்: அரோரா சின்க்ளேர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 2ஆவது போட்டியாளராக அரோரா சின்க்ளேர் கலந்து கொண்டார். இவர் பலூன் அக்கா என்று அழைக்கப்படுகிறார். இவர், மாடல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதோடு, சோஷியல் மீடியாவில் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார்.

Scroll to load tweet…

3ஆவது போட்டியாளர்: எஃப் ஜே (அதிசயம்)

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 3ஆவது போட்டியாளராக நடிகர் எஃப் ஜே என்று அழைக்கப்படும் அதிசயம் பங்கேற்றுள்ளார். அரண்மனை 4 மற்றும் சுழல் : தி வோர்டெக்ஸ் ஆகிய படங்களில் நடித்து தனது ரோலுக்காக நன்கு பரீட்சயமானவர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர் விஜய் சேதுபதி உங்களது பெயர் என்னவென்று கேட்ட போது அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மேலும் இந்நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ரசிகர் பட்டாளங்களை ஏற்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது.

Scroll to load tweet…