பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி, துஷார் மற்றும் கனி திரு ஆகிய 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி 2ஆவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பங்கேற்றார். 2ஆவது போட்டியாளராக சமூக வலைதள பிரபலம் அரோரா சின்க்ளேர் கலந்து கொண்டார். இவர்களது வரிசையில் 3ஆவது போட்டியாளரான அரண்மனை 4 பட நடிகர் எஃப் ஜே (அதிசயம்) கலந்து கொண்டார்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்த 3 போட்டியாளர்களாக விஜே பார்வதி, துஷார் மற்றும் கனி திரு ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 6ஆவது போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

60 வயதை எட்டினாலும் அழகு குறையாத 80ஸ் நடிகர்கள் - வைரலாகும் ரீ -யூனியன் போட்டோஸ்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 4ஆவது போட்டியாளர்: விஜே பார்வதி

மதுரையை பூர்வீகமாக கொண்டவர். படித்தது என்னவோ பத்திரிக்கை துறை. மிகவும் துணிச்சலும், தைரியமும் கொண்டவர். தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தான் வீட்டில் 2ஆவதாக பிறந்தவர். விஜே பார்வதி, இவர் ஒரு குட்டி வனிதா என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் சர்வைவர் நிகழ்ச்சி, அதில் சண்டைக்கோழியாக வலம் வந்தவர் தான் பார்வதி. அதனால் பிக் பாஸுக்கு அளவெடுத்து செய்த போட்டியாளராக இவர் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இவரும் இந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொண்டுள்ளார்.

Scroll to load tweet…

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 5ஆவது போட்டியாளர்: துஷார்

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் துஷார். பிஸினஸ் மேமேஜ்மெண்ட் படித்துள்ளார். அழகாக தமிழ் பேசக் கூடியவர். இவரது பாட்டி சிங்கப்பூரைச் சேர்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், துஷாரும் பார்ப்பதற்கு ஃபாரீனைச் சேர்ந்தவர் போன்று இருக்கிறார். பார்ப்பவர்கள் எல்லோருமே இவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிடுவார்களாம். சிம்புவின் தீவிர ரசிகர். விஜய் சேதுபதியையும் பிடிக்குமாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

Scroll to load tweet…

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: 6ஆவது போட்டியாளர் – கனி திரு

இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடிக்கவும் செய்துள்ளார். ஆனால், பெரியளவில் எந்த வரவேறும் இல்லை. இந்த நிலையில் தான் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Scroll to load tweet…