60 வயதை எட்டினாலும் அழகு குறையாத 80ஸ் நடிகர்கள் - வைரலாகும் ரீ -யூனியன் போட்டோஸ்!
80s Stars Reunion: 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய, நடிகர் - நடிகைகள் இந்த ஆண்டு சென்னையில் ரீ யூனியன் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

31 பிரபலங்கள் பங்கேற்ற ரீ -யூனியன்:
ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்பு.
ஒவ்வொரு வருடமும் நடக்கும் சந்திப்பு:
ஒவ்வொரு வருடமும் ஒன்றாக படித்த பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980கள் மற்றும் 90களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து தங்களின் நட்பையும், அன்பையும் பரிமாறிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
போன ஆண்டு நடைபெறவில்லை:
கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன் நடந்துள்ளது. ஆர்ப்பாட்டமோ... அளவுகடந்த கொண்டாட்டமோ இல்லாமல் முழுக்க முழுக்க நட்பின் வெளிப்பாடாக மட்டுமே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
ஸ்ரீபிரியா வீட்டில் நடந்த சந்திப்பு:
அதே போல் இந்த முறை பிரமாண்ட நட்சத்திர ஹோட்டேல்ஸ், மற்றும் வெளிநாடுகளில் இந்த நிகழ்வு நடைபெறாமல் சென்னையில் உள்ள ராஜ்குமார் சேதுபதி, மற்றும் ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
மாலை தொடங்கி காலை வரை நடந்தது:
இந்த இனிமையான நிகழ்வில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். தங்களின் விலைமதிப்பற்ற நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் தொடங்கிய ரீயூனியன் காலை வரை நடந்துள்ளது. பின்னர் அனைவரும் அடுத்த வருடம் ஒன்று கூடுவோம் என கூறி நீங்கா நினைவுகளோடு அங்கிருந்து விடைபெற்றுள்ளனர்.
சுஹாசினி மற்றும் லிஸ்ஸி ஒருங்கிணைத்தனர்:
இந்த நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி ஆகியோர் தான் ஒருங்கிணைத்திருந்தனர்.
பங்கேற்ற பிரபலங்கள்:
இந்த ரீ-யூனியனில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பூ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, நரேஷ், சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா, ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.