- Home
- Politics
- விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டியதற்கு ஆதவ் அர்ஜூன் தான் காரணம் என நினைக்கிறார் விஜய். அதனால் விஜய் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.

நிகழ்ச்சிகளை தவிர்க்கும் விஜய்
தென் மாவட்ட கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட திட்டமிட்டு இருந்த விஜய் ஜனநாயகன் பிரச்சனை, சிபிஐ விசாரணை போன்ற அழுத்தங்களால் அதை கேன்சல் செய்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளையும் தவிர்த்து வருவதாகச் சொல்கிறார்கள்.
திமுகவை போல தவெக சார்பிலும் ஒவ்வொரு வருடமும் சமத்துவ பொங்கல் கொண்டாட விஜய் முடிவு எடுத்திருந்தாராம். இந்த பொங்கலுக்கு தென் மாவட்டத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கிராமத்து சென்று பொங்கல் கொண்டாட தீர்மானித்த விஜய் அதற்கான ஏற்பாடுகளை பார்க்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், ஜனநாயகனுக்கு சென்சார் சிக்கல், சிபிஐ விசாரணை போன்ற காரணங்களால் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை கேன்சல் செய்து விட்டார். பனையூரில் திட்டமிடப்பட்டிருந்த முக்கியமான சில கட்சி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய சொல்லிவிட்டார்
வழக்கறிஞர்களிடம் ஆலோசனை
தேர்தல் ஏற்பாடுகள், அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டணி பற்றிய முடிவுகள் என ஆலோசிக்க விஜயிடம் அப்பாயின்மென்ட் கேட்ட மூத்த நிர்வாகிகளையும் சந்திக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தயாரிப்பு குழுவை மட்டும் அறிவித்து விட்டு சைலண்ட் ஆகிவிட்டார் விஜய். சிபிஐ விசாரணைக்காக தனி விமானத்தில் திங்கள்கிழமை டெல்லிக்கு போகிற விஜய் அங்கே என்ன சொல்ல வேண்டும் என்பதை பற்றி தனக்கு நெருக்கமான சில வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.
இந்நிலையில், தவெக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது விஜய் கடும் மனவேதனையில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். ‘‘கரூர் விவகாரத்தில் முதலில் திமுக அரசு எஸ்ஐடி அமைத்தது. ஆனால், ஆதவ் அர்ஜூனா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரப்பட்டது. உச்ச நீதிமன்றம் அனுமதித்ததால் சிபிஐ விசாரணை தொடங்கியது.
சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது? டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் போன்றோர் பல நாட்கள் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். பிரசார பேருந்து சிசிடிவி வீடியோக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
விஜய்க்கு கோபம் ஏன்?
சிபிஐ விசாரணை இப்போது விஜயை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆதவ் அர்ஜூனா தான் முதலில் சிபிஐ விசாரணை கோரினார். அப்போது விஜய், ஆதவ் அர்ஜூனாவிடம், ‘‘நாம் எஸ்.ஐ.டி விசாரணையை சமாளிப்போம். சிபிஐ விசாரணை வேண்டாம். அதன் மூலம் பாஜக அரசு நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் சிக்கல் உண்டாகும்’’ என எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளார். ஆனால், விஜய் பேச்சை கேட்காமல் ஆதவ் அர்ஜூனா விடாப்பிடியாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றம் சென்றார்.
ஆனால், விஜய் நினைத்தது போலவே அது தவெகவுக்கு எதிராகத் திரும்பியது போல் தோன்றுகிறது. சிபிஐ கேள்விகள் கடுமையாக இருந்ததால் ஆதவ் அர்ஜூனாவே ஆடிப்போனார். சிபிஐ விசாரணியின்போது விஜயின் டிரைவர் உளறிய போது ஆதவ் அர்ஜூனா குறுக்கிட்டு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆதவ் மீது விஜய் கடும் விரக்தி
விஜய் இப்போது சிபிஐக்கு ஜனவரி 12, 2026 அன்று டெல்லி ஆஜராக சம்மன் பெற்றுள்ளார்.பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்தை கரூரில் ஓட்டிய டிரைவரையே ஓட்டச் சொல்லி இஞ்ச் இன்சாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆதவ் அர்ஜூனாவின் ஆலோசனையால் சிபிஐ விசாரணை கோரியது தவறு என நினைக்கிறார் விஜய்.
அதை வைத்து இப்போது பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டியதற்கு ஆதவ் அர்ஜூன் தான் காரணம் என நினைக்கிறார் விஜய். அதனால் விஜய் அவர் மீது கோபத்தில் இருக்கிறார். கூடுதலாக, ஜனநாயகன் பட வெளியீடு தாமதமாகி வரும் நிலையில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கூறி ஆதவ் அர்ஜூனாவிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார் விஜய். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆதவ் மீது பயங்கர விரக்தியில் இருக்கிறார்’’ என்கிறார்கள் பனையூர் வட்டாரடத்தினர்.
